தமிழ்நாடு

“ஆளில்லாத வீடுதான் டார்க்கெட்.. 13 வீடுகளில் தொடர் திருட்டு” : வாகன சோதனையில் கொள்ளையன் சிக்கியது எப்படி?

சென்னையில் பூட்டிய வீடுகளைக் கூறிவைத்துக் கொள்ளையடித்து வந்த நபரை போலிஸார் கைது செய்தனர்.

“ஆளில்லாத வீடுதான் டார்க்கெட்.. 13 வீடுகளில் தொடர் திருட்டு” : வாகன சோதனையில் கொள்ளையன் சிக்கியது எப்படி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஐ.சி.எஃப் பகுதியில் போலிஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் போலிஸாரை கண்டதும், வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதைப்பார்த்த போலிஸார் உடனே அவரை துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது அந்த நபரிடம் கத்தி, சுத்தியல் போன்ற ஆயுதங்கள் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலிஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

இதில், ஓட்டேரியைச் சேர்ந்த ஜெபராஜ் என்பதும், பூட்டிய வீடுகளைக் கூறிவைத்துத் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. மேலும் 13 வீடுகளில் கைவரிசை காட்டியதாகவும் போலிஸாரிடம் ஜெபராஜ் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து அவரிடம் இருந்து 95 சவரன் நகைகளை போலிஸார் பறிமுதல் செய்தனர். பிறகு அவரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories