தமிழ்நாடு

“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!

“தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர் தந்தை பெரியார்.”

“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

திராவிட சிந்தனைகளின் வேராக விளங்கும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான இன்று (செப். 17) தான், தி.மு.க என்கிற பேரியக்கமும் பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது.

இந்நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, ‘சமூகநீதி நாள்’ என பெயர்சூட்டி ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.

இந்நிலையில், இது குறித்து தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தனது சமூக வலைதளப் பக்கத்தில், “காலத்தை வென்ற கொள்கைத் தலைவர் தந்தை பெரியார்!

நெடுங்காலமாய் கற்பிக்கப்பட்ட ஆதிக்கப் பொய்களை உடைத்து நொறுக்கியவர். தமிழ் நிலத்தை பகுத்தறிவு கொண்டு உழுது பண்படுத்தியவர். சுயமரியாதை எனும் மனித மாண்பை உயிருக்கு நிகராய் உரைக்கச் செய்த மானமிகு தலைவர்.

“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!

மொழியும், நிலமும், மானமும், அறிவும் நமது பிறப்புரிமை என்று முரசறைந்தவர் எங்கள் பெரியார், எல்லோருக்கும் பெரியார், என்றென்றைக்கும் பெரியார்!” என்று தந்தை பெரியாரின் சிறப்பை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, “திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது, தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது. ஏழைக்கு உணவு, குழந்தைக்கு கல்வி, இளைஞர்களுக்கு வேலை, பெண்களுக்கு சமவாய்ப்பு, ஒடுக்கப்பட்டோருக்கு சமஉரிமை பெற்றுத் தந்தது கழகம் .

இந்திய ஒன்றியத்தில் சுயமரியாதையின் பிறப்பிடமாய், மாநில சுயாட்சியின் குரலாய், வளர்ச்சியின் அடையாளமாய் தமிழ்நாட்டை மாற்றிக் காட்டியது நம் கழகம். தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் - முதல்வர் தளபதி ஆகியோரது வழியில் சமூகநீதிப் பயணத்தை முன்னெடுப்போம். சமத்துவ சமூகம் படைக்க உறுதியேற்போம்” என்று தி.மு.க தொடங்கிய சிறப்பை குறிப்பிட்டும் உறுதியேற்றுள்ளார் கனிமொழி எம்.பி.

banner

Related Stories

Related Stories