தமிழ்நாடு

தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தி.மு.க முப்பெரும் விழாவில் பெரியார் விருது கனிமொழி எம்.பிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

தி.மு.க முப்பெரும் விழா :  கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாள் இம்மூன்றையும் இணைத்து தி.மு.க. முப்பெரும் விழாவாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒவ்வொரு செப்டம்பர் மாதமும் பெருவிழாவாக நடத்தி வந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நம்மை விட்டு பிரிந்தாலும் அவரது அடியொற்றி கழகத் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தி.மு.க. முப்பெரும் விழாவை தொடர்ந்து நடத்தி வருகிறார்.

அந்தவகையில் திராவிட இயக்க வரலாற்றில் – தி.மு.க. வரலாற்றில் முப்பெரும் விழா தனிச்சிறப்புப் பெற்றதாகும். இம்முப்பெரும் விழாவையொட்டி வழங்கப்படும் விருதுகள் ஒவ்வொரு கழகத்தினருக்கும் தனது உழைப்புக்கு கிடைத்த விருதாகவே பெருமைகொள்வர்.அந்த வகையில் தி.மு.க. முப்பெரும் விழா 17.09.2025 அன்று கரூர் மாநகரில் நடைபெறும் என்று தலைமைக் கழகம் சார்பில் கழகத் தலைவர், முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.

தி.மு.க முப்பெரும் விழா :  கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இதன்படி இன்று கரூரில் முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கழக உடன்பிறப்புகளின் உற்சாக வரவேற்பிற்கு இடையில், பிரம்மாண்டமாய் முப்பெரும் விழா திடலுக்குள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகைத் தந்தார்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்ட செயலாளர் வி.செந்தில் பாலாஜி வரவேற்புரையாற்றினார். பின்னர் கழகப் பணியை சிறப்பாக மேற்கொண்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் உள்ளிட்ட 16 பேருக்கு மண்டலங்கள் வாரியாக விருதுகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கௌரவித்தார்.

பின்னர்,பெரியார் விருது கனிமொழி எம்.பிக்கும், அண்ணா விருது சுப.சீத்தாராமன் அவர்களுக்கும், கலைஞர் விருது சோ.மா.இராமச்சந்திரன் அவர்களுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது குளித்தலை சிவராமன் அவர்களுக்கும், பேராசிரியர் விருது மருதூர் இராமலிங்கம் அவர்களுக்கும், மு.க.ஸ்டாலின் விருது பொங்கலூர் நா.பழனிச்சாமிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் மூத்த பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் அவர்களுக்கு முரசொலி செல்வம் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார். இந்த ஆண்டு முதல் முரசொலி செல்வம் விருது வழங்கப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories