Tamilnadu
பெண்களை வைத்து பாலியல் தொழில்.. திட்டம் போட்டு கணவனை போலிஸில் பிடித்துக் கொடுத்த மனைவி - அதிர்ச்சி தகவல்!
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண் ஜோஷி. இவர் சென்னையில் வேலை செய்தபோது அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அருண் கடந்த மே மாதம் பஹ்ரைன் நாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார்.
இதனால் அவரது மனைவி வீட்டில் இருந்த கணினியை பயன்படுத்தியுள்ளார். அப்போது, பெண்களின் ஆபாசப் படங்கள் மற்றும் வீடியோக்கள் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் கணவன் வெளிநாட்டிலிருந்து கொண்டு தமிழ்நாட்டில் இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து கணவனை போலிஸாரிடம் பிடித்துக் கொடுக்க திட்டம் போட்டுள்ளார். பிறகு இன்ஸ்டாகிராமில் போலியாக ஒரு பக்கம் துவங்கி தனது கணவருடன் பேசி வந்துள்ளார்.
அப்போது, இளம் பெண் ஒருவர் பேசுகிறார் என நினைத்து அவரிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். பிறகு பாலியல் தொழிலில் ஈடுபட்டால் விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதையடுத்து இதற்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதனால் அருண் ஜோஷி, அந்தப் பெண்ணைப் பார்க்க சென்னை வந்து சொகுசு விடுதியில் சந்தித்துள்ளார். அப்போது விடுதி அறையில் மனைவில் இருந்தைப் பார்த்து அதிர்சசியடைந்தனர். பிறகு அங்கு மறைந்திருந்த போலிஸார் அவரை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். பின்னர் போலிஸார் இவர் எந்த எந்த இளம்பெண்களை ஏமாற்றி வந்துள்ளார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!