தமிழ்நாடு

இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாப பலி : சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்!

பல்லாவரம் அருகே இரண்டாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த மூன்று வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்த 3 வயது குழந்தை பரிதாப பலி : சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலுார், ராஜேஸ்வரி நகர், இரண்டாவது தெருவை சேர்ந்தவர் முருகன். அவரது, மூன்று வயது குழந்தை சர்வன். நேற்று , வீட்டின் கீழ் தளத்தில் வர்ணம் பூசும் வேலை நடந்தது.

அதனால், குழந்தையை ‛டிவி’ பார்க்க வைத்துவிட்டு, பெற்றோர் இருவரும், வர்ணம் பூசும் வேலை கவனித்து கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் இரண்டாவது , மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த குழந்தை சர்வன் நிலைதடுமாறி படிக்கெட்டின் கைபிடி வழியாக தவறி கீழே விழுந்தான்.

இதில் தலையில் படுகாயமடைந்த குழந்தை சர்வனை பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கபட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக, சின்னமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை உயிரிழந்தன.

தகவல் அறிந்து வந்த சங்கர் நகர் போலிஸார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories