Tamilnadu
மொட்டை மாடியில் இருந்து குதித்த போது இறந்தே பிறந்த ஆண் குழந்தை; IIT மாணவி கவலைக்கிடம்; சென்னையில் பகீர்!
சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது 53. இவரது மனைவி சாவித்திரி மற்றும் மகள் (21). மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். ராஜேந்திரன் சினிமா துறையில் லைட் மேனாக வேலை செய்து வருகிறார். மகள் கிண்டியில் உள்ள ஐடிஐ யில் இன்பர்மேஷன் டெக்னாலஜி பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் எட்டு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். நேற்று இரவு வீட்டின் மொட்டை மாடியில் இருந்து திடீரென கீழே குதித்ததில் சம்பவ இடத்தில் இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து ஆம்புலன்ஸ் மூலமாக கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாணவி அனுமதிக்கப்பட்ட போது மருத்துவரின் ஆலோசனைப்படி மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இறந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தையை கோடம்பாக்கம் மகப்பேறு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 316 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!
-
தமிழ்நாட்டிற்கான ரூ.2,087 கோடி நிதியை நிலுவையில் வைத்திருக்கும் பாஜக அரசு! : RTI மூலம் வெளியான உண்மை!
-
அருப்புக்கோட்டையில் அரசு அலுவலகங்களை ஆட்டிப்படைக்கும் த.வெ.க.வினர்! : கடும் அதிருப்தியில் மக்கள்!
-
“சர்க்கரை விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வேண்டும்!” : ஜவாஹிருல்லா வலியுறுத்தல்!
-
“தமிழர் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்று!” : தங்கம் தென்னரசு பெருமிதம்!