Tamilnadu

அடுத்தடுத்து 2 நகைக்கடைகளில் சுவற்றை துளையிட்டு 600 கிராம் தங்கம், 10 கிலோ வெள்ளி கொள்ளை : நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி பழையபேட்டை பகுதியை சேர்ந்தவர் குமார். இவர் வரட்டனப்பள்ளி கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குமார் கடைக்கு சென்று பார்த்தபோது, கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு கடைக்குள் இருந்த சுமார் 7 கிலோ வெள்ளி மற்றும் 4 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

அதேபோல் வரட்டனப்பள்ளியில் குடியிருந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த உமாராதேவி என்பவர் வரட்டனப்பள்ளியில் கடந்த 6 ஆண்டுகளாக நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையிலும் சுவற்றை துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தகவல் அளித்துள்ளனர். இதனை அடுத்து உமாராதேவி கடைக்கு சென்று பார்த்த போது, கடையில் இருந்த 3 கிலோ வெள்ளி, 300கிராம் தங்க நகை மற்றும் 45,000 ரூபாய் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

தொடர்ந்து குமார் மற்றும் உமாராதேவி அளித்த புகாரின் அடிப்படையில் கந்திகுப்பம் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரனையில் குமார் நகைகடை நடத்தி வரும் கட்டிடத்தின் உரிமையாளரானா கேசவன் வீட்டிற்க்குள் 7 பேர் கொண்ட மர்ம கும்பல் புகுந்து கேசவனை கட்டிபோட்டுள்ளனர்.

பின்னர் கேசவன் வீட்டின் வழியாக சுவற்றில் துளையிட்டு நகைகடைக்குள் சென்று கொள்ளையடைத்து சென்றதும் தெரியவந்தது. மேலும் இதே கொள்ளை கும்பல் தான் உமாராதேவி நகைக்கடையிலும் கொள்ளையடித்து உள்ளனர். போலிஸார் வழக்குபதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: கெமிக்கல் நிறுவனத்தில் வாயு கசிவு.. ஒருவர் பலி, 13 பேர் மருத்துவமனையில் அனுமதி - அமைச்சர் நேரில் ஆய்வு !