Tamilnadu
குன்னூர் கோர விபத்து; தீக்காயங்களுடன் போராடி மீட்புப்பணியில் ஈடுபட்ட தமிழக போலிஸ்; யார் அந்த நால்வர்?
ராணுவ பயிற்சி கல்லூரியின் முப்படை இராணுவ அதிகாரிகளின் பயிற்சி நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 12 இதர ராணுவ அதிகாரிகள் பயணம் செய்தனர்.
இந்த ஹெலிகாப்டர் விமானம் குன்னூர் ராணுவப் பயிற்சி கல்லூரி அருகல் மேல் குன்னூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் வான் வெளியில் பறந்துக்கொண்டு இருந்தபோது திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விழுந்து நொறுங்கி தீப்பற்றிக்கொண்டது.
இந்தச் சம்பவம் பற்றி அறிந்த உடனேயே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்கள் உதவியுடன் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். மீட்பு நடவடிக்கைக்கு பின்னர் இந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது துணைவியார் மற்றும் 11 இதர ராணுவ அதிகாரிகள் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.
இந்த விபத்தில் விமானத்தின் குரூப் கேப்டன் வருண்சிங் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இந்த விபத்து தொடர்பான புலன் விசாரணை மற்றும் விபத்து நடந்தது குறித்த விரிவான ஆலோசனை கூட்டம் இன்று 09.12.2021 ம் தேதி மாலை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கோவை சரக காவல்துறை துணைத்தலைவர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் இந்த விபத்து வழக்கின் விசாரணை அதிகாரி உட்பட இதர காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தடயவியல் இயக்குனரும் விரிவான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கினார்.
இது தொடர்பாக மேல்குன்னூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நீலகிரி மாவட்டம் முத்து மாணிக்கம் புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு முதல் முதலாக சென்று தீக்காயங்களுடன் போராடிய நான்கு அதிகாரிகளை விரைவாக மீட்ட காவலர் சிவா, முத்து மாணிக்கம் கூடுதல் காவல் கண்காணிப்பாளார் , துணைக்காவல் கண்காணிப்பாளர் சசிகுமார் ஆய்வாளர் பிரிதிவிராஜ் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவி ஆகியோரை காவல் துறை தலைமை இயக்குநர் பாராட்டினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!