தமிழ்நாடு

“கண்டுபிடிக்கப்பட்ட இராணுவ ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி” : விபத்துக்கு முன்பு விமானத்தில் நடந்தது என்ன?

விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கண்டுபிடிக்கப்பட்ட இராணுவ ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி” : விபத்துக்கு முன்பு விமானத்தில் நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி மலைப்பகுதியில் நேற்றைய தினம் இராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் உள்ளிட்ட 12 ராணுவ அதிகாரிகளும், பிபின் ராவத்தின் மனைவி மதுலிகா ராவத்தும் உயிரிழந்தனர்.

விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள பதிவில், இந்திய விமானப் படையின் எம்ஐ - 17 வி5 வகை ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்தார் என்றும் முப்படைகளின் தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கறுப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமானப்படை வீரர்கள் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து குன்னூர் காட்டேரி மழைப்பகுதியின் நஞ்சப்பா சத்திரம் என்ற இடத்தில் கருப்புப் பெட்டியை இராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

மேலும் அதோடு சேர்த்து விமானத்தில் இருந்து சிதறிய மேலும் இரண்டு பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர். அதனை பத்திரமாக மீட்ட இராணுவ அதிகாரிகள் பொங்களூரு மற்றும் டெல்லிக்கு அனுப்பி வைத்து ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆரஞ்சு நிறத்தில் காணப்படும் இந்த கருப்புப் பெட்டி விமானி இருக்கையில் இருந்து விமானம் முழுவதும் உள்ள சத்தங்களை பதிவு செய்வும், விமானம் பறக்கும் தூரம், எரிபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய தகவலை சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதால் இந்த பெட்டி மூலம் எவ்வாறு விபத்து ஏற்பட்டது என்பதை துல்லியமாக கண்டறிய முடியும் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories