Tamilnadu

IAFMi - 17V5 ரக ஹெலிகாப்டரில் குடும்பத்துடன் வந்த பிபின் ராவத்.. நீலகிரி வந்த காரணம் என்ன ? #Exclusive

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது. இதனை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, கோவையில் உள்ள ராணுவ மையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு ராணுவ அதிகாரி மற்றும் வீரர்கள் வந்துள்ளனர்.

பிற்பகல் 12:30 மணியளவில், குன்னூர், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில், ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இதில் ராணுவ அதிகாரி மற்றும் 4 வீரர்கள் உயிரிழந்தாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் உயிரிழந்தவர்கள் யார் என்ற தகவல் தற்போது வரை வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது IAFMi - 17V5 ரக ஹெலிகாப்டரில் பிபின் ராவத் பயணித்ததை தற்போது விமானப் படை உறுதி செய்துள்ளது. மேலும் இந்த விமானத்தில் பிபின் ராவத் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட 14 பேர் பயணித்தாகக் கூறப்படுகிறது. மேலும் விபத்துக் குறித்து விசாரணைக்கு விமானப் படை உத்தரவிட்டுள்ளது.

Also Read: முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - நால்வர் உயிரிழந்ததாக தகவல்? நடந்தது என்ன?