இந்தியா

முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - நால்வர் உயிரிழந்ததாக தகவல்? நடந்தது என்ன?

கோவையில் இருந்து முப்படைகளின் தலைமை தளபதி சென்ற ராணுவ ஹெலிகாப்டர் குன்னுார் அருகே விபத்தில் சிக்கியது.

முப்படை தலைமை தளபதி பயணித்த ஹெலிகாப்டர் விபத்து - நால்வர் உயிரிழந்ததாக தகவல்? நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, கோவையில் இருந்து வந்த IAF MI-17V5 என்ற ராணுவ ஹெலிகாப்டர் காட்டேரி மலைப்பகுதியில் விழுந்து விபத்தில் சிக்கியது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெல்லிங்டன் ராணுவ அலுவலர்களுக்கான பயிற்சி கல்லூரி மற்றும் மையம் உள்ளது. இங்கு நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பங்கேற்பதாக இருந்தது.

இதனை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, கோவையில் உள்ள ராணுவ மையததில் இருந்து ஹெலிகாப்டரில் வெல்லிங்டன் ராணுவ பயிற்சி மையத்திற்கு பிபின் ராவத், அவரது குடும்பத்தினர் மற்றும் 14 பேர் பயணித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், பிற்பகல் 12:30 மணியளவில், குன்னூர், காட்டேரி நஞ்சப்பா சத்திரம் பகுதியில், ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இதில் நால்வர் உயிரிழந்தாகவும், மற்றொருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளிவந்துளது.

இது தொடர்பாக போலிஸ், ராணுவம் விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டரில் இருந்த முப்படைகளின் தலைமை தளபதியின் நிலை என்ற கேள்வியும் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories