Tamilnadu

”முன்னேற்றப் பாதையில் தமிழகம்; பொருளாதார தன்னிறைவு வெகு தொலைவில் இல்லை” - தினகரன் நாளேடு புகழாரம்!

பொருளாதார ரீதியாக விரைவில் நாட்டிலேயே முதலிடம் பெறும் என ‘தினகரன்’ நாளேடு 30.11.2021 தேதியிட்ட இதழில் ‘பொருளாதார தன்னிறைவு’ என்ற தலைப்பில் தலையங்கம் தீட்டியுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:

”தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் உயர தனிக்கவனம் செலுத்தி வருகிறார். தமிழகம் பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைய பல்வேறு வியூகங்கள் வகுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலத்தில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது வரவேற்க வேண்டிய விஷயம்.

கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னேற்ற பாதையில் பயணிக்க துவங்கியுள்ளது. விரைவில், பொருளாதார ரீதியாக நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பெறும். அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். தமிழக அரசின் நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனாலேயே தமிழகத்தில் பல்வேறு நிறுவனங்கள் தொழில் துவங்க தாமாக முன் வந்துள்ளது.

Also Read: ஒமிக்ரான் எதிரொலி: சர்வதேச பயணிகள் கவனத்திற்கு.. பொது சுகாதாரத்துறையின் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

இது ஒரு புறம் இருக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்கினால்தான், அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிய முடியும். இதன் மூலம் தமிழகத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும். அறிவியலில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் புதிய கண்டுபிடிப்பு தற்போது தேவையாக உள்ளது. கூர்மையான அறிவுத்திறன் படைத்தவர்கள் தமிழக இளைஞர்கள். எனவே அவர்களால் புதிய கண்டுபிடிப்புகளில் சாதிக்க முடியும். மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

சுகாதார துறையிலும் அடுத்தகட்ட நகர்வை நோக்கி தமிழகம் சென்று கொண்டு இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாக மருத்துவ வசதிகள் கிடைத்திட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அரசின் திட்டங்களை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதுப்புது அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தன்னிறைவு பெறும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டும் சில கட்சி தலைவர்கள் மக்களை தேடி செல்கின்றனர். முக்கியமாக, தேர்தல் நேரத்தில் விவசாயிகளை புகழ்ந்து பேசினர். ஆனால், பல மாதங்களாக கடுங்குளிரில் போராடிய போது விவசாயிகளை சந்திக்க அவர்கள் வரவில்லை. இதை விவசாயிகள் மறந்து விடவில்லை. மக்கள் நலன் தான் எப்போதும் முக்கியம். மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, அவர்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பான புதுப்புது திட்டங்கள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டு வருகிறது. மக்களின் முழு ஒத்துழைப்போடு, அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் இடத்தை விரைவில் தமிழகம் எட்டும்.”

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: 'இல்லம் தேடிக் கல்வி'... வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை!