Corona Virus

ஒமிக்ரான் எதிரொலி: சர்வதேச பயணிகள் கவனத்திற்கு.. பொது சுகாதாரத்துறையின் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக தென் கிழக்கு ஆசியா உள்ளிட்ட 12 நாடுகளிலிருந்து தமிழகம் வருகை தரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம்.

ஒமிக்ரான் எதிரொலி: சர்வதேச பயணிகள் கவனத்திற்கு.. பொது சுகாதாரத்துறையின் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒமிக்ரான் கொரோனா பரவுவதை முன்னிட்டு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலாகிறது.

அதன் விவரம் பின்வருமாறு:-

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக ஒன்றிய சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை செயலாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்து. பொது சுகாதாரத்துறை இயக்குநர், விமான நிலைய இயக்குநருக்கு புதிய கட்டுப்பாடுகளை இன்று அமல்படுத்த சுற்றறிக்கை அனுப்பினார்.

அதன்படி சென்னை விமான நிலையத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளான தென் ஆப்பிரிக்கா, பிரேசில், இங்கிலாந்து, பங்களாதேஷ், மொரீஷியஸ், போஸ்ட்வானா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், சீனா, இஸ்ரேல் உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து இந்தியா வரக்கூடிய சர்வதேச விமான பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்திலேயே ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பரிசோதனை முடிவுகள் வரும் வரை விமான நிலைய வளாகத்திலேயே பயணிகளை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் அதில் நெகட்டிவ் என பரிசோதனை முடிவில் வருகிற பட்சத்தில் அதன் பின்னரே விமான பயணிகள் அவர்களது வீடுகளில் ஏழு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஏழாம் நாள் முடிவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் நெகட்டிவ் வந்த பின்னரும் ஏழு நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் என 14 நாட்கள் இருக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் எதிரொலி: சர்வதேச பயணிகள் கவனத்திற்கு.. பொது சுகாதாரத்துறையின் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

இந்த புதிய கட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகள் இன்று முதல் அமல்படுத்தப்பட்டு சென்னை விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரத்துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்கு முன்பாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு நெகட்டிவ் என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். பின்னர் விமான நிலையத்துக்கு வந்தவுடன் பரிசோதிக்கப்படும். தடுப்பூசியை கட்டாயம் செலுத்தியதற்கான சான்றிதழ்களையும் அரசு இணையத்தில் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். இவற்றை கண்காணிக்க தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சர்வதேச விமான நிலையத்திற்கும் ஒரு கண்காணிப்பு அதிகாரியையும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12 நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளை சேர்ந்த விமானத்தில் வரும் பயணிகளில் 5 சதவீதம் பேரை கண்டறிந்து, 14 நாட்களுக்கு பிறகு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அந்த 5 சதவீத பயணிகள் பட்டியலை விமான நிறுவனங்களே முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அறிகுறி உள்ளவர்களையும் தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் பொது சுகாதராத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, மேற்கூறிய 12 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் அமர்ந்து காத்திருப்பதற்காக விமான நிலையத்தில் 500 இருக்கைகள் தயார் அமைக்கப்பட்டுள்ளது. அந்த பயணிகள் தம் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதற்காக தொலைபேசி வசதியும், பொழுது போக்கிற்காக தொலைக்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories