Tamilnadu
”எத்தனை காலமானாலும் இனி மு.க.ஸ்டாலின்தான் முதலமைச்சர்” - அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு!
தமிழகத்தில் இனி எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் ஒரே முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்தான். இனி எந்த இயக்கமும் வரமுடியாது. அந்த அளவிற்கு ஆட்சி செய்து கொண்டு வருகிறார் என தேனியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில் தமிழகத்தில் இனி எத்தனை ஆண்டு காலம் ஆனாலும் ஒரே முதலமைச்சர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான், இனி எந்த இயக்கமும் வரமுடியாது. அந்த அளவிற்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்.
இந்தியாவில் சிறந்த முதல்வர் ஸ்டாலின் என்று கூறினாலும் அதை மிகவும் அடக்கத்தோடு இந்திய நாட்டில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என்று நமது முதல்வர் கூறியுள்ளார். அவருக்கு உறுதுணையாக நாம் அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். மூத்த பொறுப்பாளர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் இடம் கிடைக்காவிட்டாலும் வருத்தப்பட வேண்டாம். வருகின்ற கூட்டுறவுத்துறையில் அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும்.
தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி.ஆர் இருந்த காலத்திலும் உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி திமுக தான். இன்று தொண்டர்கள் சுறுசுறுப்பில் தேனி மாவட்டத்தை மிஞ்சுவதற்கு எந்த மாவட்டமும் இல்லை. 100 சதவீத வெற்றயினை நமது தலைவரிடம் ஒப்படைப்போம். அனைத்து மாவட்டங்களிலும் பாகுபாடு இல்லாமல் பணியாற்றிய காலம் தான் அந்த காலம் என்றும் அனைவரும் ஒற்றுமையுடன் பணியாற்றி வெற்றி பெறுவோம் என கூறினார்.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!