Tamilnadu
ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ. 3 கோடி மோசடி... ராஜேந்திரபாலாஜி மீது போலிஸார் வழக்குப்பதிவு!
ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தது உள்ளிட்ட 2 புகார்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி ஆகியோர் ஆவினில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி 30 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் விருதுநகர் காவல் கண்காணிப்பாளரிடம் அண்மையில் புகார் மனு அளித்திருந்தார்.
அதனடிப்படையில், அ.தி.மு.க வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் நண்பருமான விஜய நல்லதம்பிவிஜய நல்லதம்பியை விசாரித்ததில் கடந்த செப்டம்பர் 25ஆம் தேதி காவல் கண்காணிப்பாளர் முன்பாக ஆஜராகி பணத்தை திரும்ப வழங்குவதாக உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பலருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி தன்னிடம் 3 கோடி வரை வாங்கி ஏமாற்றிவிட்டதாக விஜய நல்லதம்பியும் ராஜேந்திர பாலாஜி மீது புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்தது உள்ளிட்ட 2 புகார்களின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஸ்வீட் பாக்ஸ் ஊழல் உட்பட பல்வேறு ஊழல்கள் புகார்கள் இருக்கும் நிலையில் பண மோசடி புகார்களும் கிளம்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
“மதுரை மெட்ரோவை தொடர்ந்து விமானத்துறையிலும் அதே பாகுபாடு!” : சு.வெங்கடேசன் கண்டனம்!
-
44 அரசு கல்லூரிகளை மேம்படுத்திட டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் : முழு விவரம்!
-
”கஷ்டமில்லாத தொழில் கவர்னர் வேலை பார்ப்பது” : கனிமொழி MP!