Tamilnadu

ஓய்வறியா முதல்வர்.. 3வது நாளாக வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்துக் கடந்த இரண்டு நாட்களாகத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.

இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ள நீரை மாநகராட்சி ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக மின்மோட்டர்களை கொண்டு அகற்றி வருகிறார்கள்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த இரண்டு நாட்களாகச் சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார். மேலும் மழை, வெள்ளத்தைக் கண்காணிக்க அதிகாரிகளையும் நியமனம் செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாளாக இன்று சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். மேலும் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

இதையடுத்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிட்டுப்பார்த்து ஆய்வு செய்தார். அதேபோல் மக்களுக்காகத் தாயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள இலவச மருத்து முகாம்களையும் இன்று முதலமைச்சர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு மருந்துகளை வழங்கினார்.

Also Read: கனமழையில் அரசு இயந்திரத்தை ஒருநொடியும் தாமதம் இல்லாமல் இயக்கும் முதல்வர்: நம்பிக்கை விதைக்கும் திமுக அரசு