Tamilnadu
“பிறந்த நாளில் ரயிலில் பாய்ந்து தேசிய வாலிபால் வீரர் தற்கொலை” : புதுச்சேரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
புதுச்சேரி வில்லியனூர் அடுத்த ஆத்துவாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தியின். அவரது மகன் தமிழ்மணி. இவர் ஜீவானந்தம் அரசுப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். மேலும் இவர் தேசிய வாலிபால் மற்றும் தடகள வீரர் ஆவார்.
இந்நிலையில், ஜீவானந்தம் வழக்கம்போல் பயிற்சிக்குச் செல்வதாக வீட்டில் கூறிவிட்டு, இன்று காலை வீட்டிலிருந்து சென்றுள்ளார். பிறகு வரும் வழியில் அரும்பார்த்தபுரம் ரயில்வே ட்ராக் அருகே வந்து சிறிது நேரம் அமர்ந்துள்ளார்.
அப்போது விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த பயணிகள் ரயில் வந்துகொண்டிருந்தது. திடீரென ஜீவானந்தம் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டார். இதனால் ரயில் அவர்மீது ஏறி இறங்கியதில் அவரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இன்று அவரின் பிறந்த நாள் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸார் ஜீவானந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிறகு இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!