Tamilnadu

பெயர் ஒற்றுமையை பயன்படுத்தி ரூ.10 லட்சம் மதிப்பிலான நிலம் மோசடி... 3 பேர் கைது : நடந்தது என்ன?

சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன். இவர் 1992ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளியரைக்குப்பம் கிராமத்தில் 2,400 சதுர அடியில் வீட்டுமனை வாங்கி பத்திரப் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து செங்குன்றத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி பெரம்பூர் மோகனின் வீட்டுமனையை போலியாக ஆவணம் செய்து 2008ஆம் ஆண்டு வேறு ஒருவருக்கு விற்றுள்ளார்.

இதனை அறிந்து பெரம்பூர் மோகன் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்த மோசடிக்கு திருநின்றவூரைச் சேர்ந்த வேலாயுதம், திருவள்ளூரைச் சேர்ந்த முனிரத்தினம் ஆகிய இருவர் உடந்தையாக இருந்ததும் பெரம்பூர் மோகனுக்குத் தெரியவந்துள்ளது.

பின்னர், இந்த நில மோசடி குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலிஸார் தலைமறைவாக இருந்த செங்குன்றத்தைச் சேர்ந்த மோகன், வேலாயுதம், முனிரத்தினம் ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். மோசடி செய்து விற்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

Also Read: “எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட சமையல்காரர்..” : வைரல் வீடியோவால் பொதுமக்கள் அதிர்ச்சி ! (வீடியோ)