Tamilnadu
வீட்டின் அருகில் சுற்றித் திரிந்த நல்ல பாம்பு.. 6 வயது குழந்தைக்கு நேர்ந்த கதி - சோகத்தில் கிராம மக்கள்!
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அடுத்த செரப்பனஞ்சேரி நாட்டரசன் பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவருக்கு 6 வயதில் சச்சின் என்ற குழந்தையும் இரண்டரை வயதில் விக்னேஷ் என்ற குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று சச்சின் மற்றும் விக்னேஷ் வீட்டு அருகில் உள்ள வயல்வெளியில் விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக நல்லபாம்பு சச்சினை கடித்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ந்துபோன ராமு மற்றும் உறவினர்கள் சச்சினை உடனடியாக பொத்தேரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அக்கம்பக்கத்தினர் சச்சினை கடித்த பாம்பை அடித்து கொன்றனர்.
இந்நிலையில் இன்று சிகிச்சை பலனளிக்காமல் சச்சின் உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து சென்ற மணிமங்கலம் காவல்துறையினர் சச்சினின் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 6 வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
குளத்தில் வாத்து பிடிக்கச் சென்ற அண்ணன், தம்பி : திடீரென நடந்த சோகம்!
-
“விவசாயத்தை அழிக்கும்.. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது” : CPI(M) வலியுறுத்தல்!
-
“தமிழ்நாட்டை பீகார், உத்தரப்பிரதேசமாக மாற்றிய த.வெ.க அரசு” : தி.மு.க அயலக அணி விமர்சனம்!
-
“ஈவு இரக்கமற்ற காட்டாட்சி...!" - த.வெ.க அரசை கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
-
“சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?” : மு.க.ஸ்டாலின் கேள்வி!