Tamilnadu
“வாகனத்தில் படுத்து தூங்கிய இளைஞரால் பீதியடைந்த வாகன ஓட்டிகள்” : நடுரோட்டில் நடந்தது என்ன தெரியுமா?
மதுரையின் முக்கியமான போக்குவரத்து நிறைந்த சாலையாக மதுரை தமிழ்ச் சங்கம் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே நேற்று மாலை சரக்கு வாகனம் ஒன்று நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தது.
இதனால், அந்த வழியாக வந்த மற்ற வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் சரக்கு வாகனத்தின் ஓட்டுனர் தனது இரண்டு கால்களை வெளியே நீட்டியவாறு படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். பலரும் அவரை எழுப்பு முயற்சி செய்தபோதும் அவர் அசையாமல் இருந்தார்.
இதனால் பதட்டமடைந்த மற்ற வாகன ஓட்டிகள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு அங்கு வந்த போலிஸாரும் சரக்கு வாகன ஒட்டியை எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அந்த நபர் எழுந்திருக்கவில்லை.
பின்னர் போலிஸார் வாக்கி டாக்கி ஒலி கேட்டு சட்டென எழுந்த அந்தநபர் சுற்றி ஆட்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். பிறகு போலிஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், எல்லீஸ் நகரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரியவந்தது.
இவர் நேற்று மாலை ஒத்தக்கடை பகுதியில் சரக்கு ஏற்றிவிட்டு சிம்மல் நோக்கி செல்லும் போது குடித்து விட்டு வாகனத்தைச் சாலையிலேயே நிறுத்திவிட்டுத் தூங்கியதாக தெரியவந்தது. இதையடுத்து போலிஸார் அவருக்கு அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
Also Read
-
திருப்பரங்குன்றம் விவகாரம் : ‘‘பியூஷ் கோயலின் ‘பியூஸ்’ போன வாதங்கள்...” - முரசொலி தலையங்கம்!
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!