Tamilnadu

ஆன்லைன் விளையாட்டில் மூழ்கிய IT ஊழியர்;பெற்றோர் கண்டித்ததால் நடந்த விபரீதம்: வாணியம்பாடியில் நடந்த சோகம்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த குப்பம் காட்டுக்கொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்துள்ளார்.

இந்நிலையில், ஆனந்தன் தனது செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதனால் இவர் பல லட்சம் ரூபாய் இழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருந்தபோதும் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார்.

இதனால் பெற்றோர்களும், உறவினர்களும் ஆனந்தனைக் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்துத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: “16 வயது சிறுமியை காதலித்த ஆட்டோ டிரைவர் குத்தி கொலை” : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!