தமிழ்நாடு

“16 வயது சிறுமியை காதலித்த ஆட்டோ டிரைவர் குத்தி கொலை” : விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!

மகளின் காதலனைக் கொலை செய்த தந்தையை போலிஸார் கைது செய்தனர்.

“16 வயது சிறுமியை காதலித்த ஆட்டோ டிரைவர் குத்தி கொலை” :  விசாரணையில் வெளிவந்த ‘பகீர்’ தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தஞ்சாவூர் மாவட்டம், வேட்டமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், பிரபாகரன் காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியைக் காதலித்து வந்துள்ளார்.

இவர்களின் காதலுக்குச் சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்கும் போது காதல் எல்லாம் எதற்கு என தனது மகளைக் கண்டித்துள்ளனர். மேலும் பிரபாகரனையும் சிறுமியின் தந்தை மணிகண்டன் கண்டித்துள்ளார்.

ஆனால், பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், பிரபாகரனை மீண்டும் எச்சரித்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில், ஆவேசமடைந்த மணிகண்டன், ஆத்திரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து பிரபாகரனைக் குத்தியுள்ளார். அப்போது தடுக்கச் சென்ற சகோதரர் விக்னேஷையும் மணிகண்டன் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பிரபாகரனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அறிந்த போலிஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த மணிகண்டனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories