Tamilnadu

லக்கிம்பூர் வன்முறை: விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்ற வழக்கு.. ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது!

உத்திரபிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் மஹாராஜா அக்ரஸேன் விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால், மவுரியா ஹெலிகாப்டர் பயணத்தை கைவிட்டு சாலை மார்க்கமாக சம்பவ இடத்திற்கு வந்தடைந்தார்.

அப்போது விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்த போது துணை முதல்வரை வரவேற்க ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ரா அந்த இடத்திற்கு வந்தடைந்தார். அப்போது மிஸ்ரா கார் ஏரியதில் 3 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதியில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் பத்திரிகையாளர் உள்ளிட்ட 9 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த விவகாரத்தில் உத்திரபிரதேச போலிஸார் இதுவரை ஒன்றிய அமைச்சர் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை. வழக்குப் பதிவு செய்யப்பட்ட பின்பும் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவரின் மகனும் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் இருந்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால் மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் ஒன்றிய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேற்றைய தினம் போலிஸில்ல் ஆஜராகினார். சுமார் 12 மணி நேரமாக நடைபெற்ற விசாரணையில் ஆஷிஷ் மிஸ்ரா முறையாக பதில் அளிக்காததைத் தொடர்ந்து அவரை போலிஸார் தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பு காரணமாக உத்திரபிரதேச அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Also Read: “சாமி சிலைகளை உடைத்து எந்திர தகடுகளை திருடி வந்தது ஏன்?” : கைதானவர் கொடுத்த ‘திடுக்’ வாக்குமூலம்!