தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ’ஓரணியில் தமிழ்நாடு’ என்ற மகத்தான முன்னெடுப்பை திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுத்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை தொடங்கி வைத்தார் கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்தப் இயக்கம் 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து 38 வருவாய் மாவட்டக் கழகங்களிலும், அந்தந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் சேர்ந்து ’ஒரணியில் தமிழ்நாடு’ குறித்து அவரவர் பகுதிகளில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
அதேபோல், அரியலூரில் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கழகத்தில் ஒன்றிணையுமாறு அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்தார். கடலூர் மேற்கு தொகுதியில் அமைச்சர் சி.வெ.கணேசன், மதுரை வடக்கு மாவட்ட பகுதியில் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கழகத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இராணிப்பேட்டையில் அமைச்சர் ஆர்.காந்தி, மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கழகத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர்.
கடலூரில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிகளி அமைச்சர் எ.வ.வேலு. விருதுநகர் தெற்கு மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கழகத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர்.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் அமைச்சர் சக்கரபாணி, திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுயில் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை சைதை தொகுதிக்குட்பட்ட லேபர் காலணியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் வீடுவீடாக சென்று பொதுமக்களை சந்தித்து கழகத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்தனர்.
இப்படி “ஓரணியில் தமிழ்நாடு!” மக்கள் சந்திப்பு இயக்கத்தின் மூலம் 1 கோடி உறுப்பினர்களை கழகத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.