Tamilnadu
பிரியாணி சாப்பிட்டா காசு கேப்பியா? கத்தியை காட்டி மிரட்டி மாமுல் கேட்டு ரவுடி ரகளை!
சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியைச் சேர்ந்த இதயத்துல்லா. இவர் அதே பகுதியில் பிஸ்மில்லா என்ற பெயரில் பீப் பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
நேற்று மாலை கடைக்கு வந்த இருவர் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் சென்றுள்ளனர். இதனையடுத்து கடையின் உரிமையாளர் இதயத்துல்லா பிரியாணி சாப்பிட்டதற்கு பணம் கேட்ட போது கத்தியைக் காட்டி மிரட்டி மாமூல் பணம் கேட்டுள்ளனர்.
பணம் கொடுக்காததால் கத்தியால் வெட்ட முயன்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கடை உரிமையாளர் இதயதுல்லா திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பொழுது சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த நாய் பல்லு அப்பு (எ) டேனியலை போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பி தலைமறைவாக உள்ள லாலூ (எ) சாகுல்ஹமீதை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
“த.வெ.க தூய சக்தி அல்ல; துயர சக்தி” : மதுராந்தகத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு!
-
“சட்டமன்றத்தில் முதலமைச்சர் இன்னும் Dance Fightதான் போடல” : எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
-
“தோல்விப் பயத்தால் ரூ.10,000 கொடுக்கம் த.வெ.க” : தேர்தல் ஆணையத்தில் என்.ஆர்.இளங்கோ புகார் மனு!
-
“புதுச்சேரி - கொலைச்சேரி ; திணிக்கப்பட்ட இடைத்தேர்தல்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் : ஆடவர் டி20 கிரிக்கெட்டில் தங்கம் வென்ற இந்தியா.. பந்தாடப்பட்ட பாகிஸ்தான்!