Tamilnadu
“அறுவை சிகிச்சை மாத்திரைகளை வாங்கி போதை மருந்தாக விற்ற கும்பல்” : போலிஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல் !
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அம்மனியம்மன் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்து வருவதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலிஸார் இவரது இடத்தில் சோதனை செய்தனர்.
அப்போது மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகளைக் கூடுதல் விலைக்குப் போதை மருந்தாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் போலிஸார் அவரிடமிருந்து 1,300 அறுவை சிகிச்சை மாத்திரைகள் மற்றும் 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் ஆந்திராவில் உள்ள மெடிக்கல் ஷாப்களில் இருந்து அறுவை சிகிச்சை மாத்திரைகளை வாங்கி வந்து போதை ஆசாமிகளுக்கு விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலின் அடிப்படையில் சூர்யா, தினேஷ்குமார் என்ற இரண்டு பேரையும் போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் மற்ற நபர்களை போலிஸார் தேடி வருகின்றனர். அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படம் வலி நிவாரணி மாத்திரைகளைப் போதை மாத்திரையாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.3 ஆயிரத்துடன் கூடிய தமிழர் திருநாள் ‘பொங்கல்’ பரிசுத் தொகுப்பு! : திட்டத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர்!
-
“‘தான் திருடி, பிறரை நம்பார்’ என்பதைப் போன்றவர்தான் எடப்பாடி பழனிசாமி!” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!