Tamilnadu
சிறுமிக்கு பாலியல் தொல்லை.. தட்டிக் கேட்ட பெற்றோரிடம் வீடியோ காட்டி மிரட்டியவர் கைது!
திருப்பூர் மாவட்டம், ராஜாபூரைச் சேர்ந்தவர் சிவராஜ். இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
மேலும், சிறுமியிடம் நெருக்கமாக இருந்தபோது அதை வீடியோ எடுத்துள்ளார். இதை காட்டி தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி இது குறித்துப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் இது குறித்து சிவராஜிடம் சிறுமியின் பெற்றோர் தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது வீடியோவை காட்டி வெளியே சொன்னால் உங்கள் குடும்ப மானமே போய்விடும் என கூறி மிரட்டியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து சிவராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
மொழிப்போர் தளபதி திமுக மூத்த முன்னோடி எல்.கணேசன் மறைவு.. முதலமைச்சர் நேரில் அஞ்சலி!
-
தமிழ் மின் நூலகத்தில் ஜி.டி.நாயுடுவின் சிறப்பு இணையப் பக்கம்... விவரம் உள்ளே!
-
“அரசுப் பள்ளி மாணவர்களை விமானத்தில் ஏற்ற காரணமே ஏ.வி.எம்.சரவணன் தான்!” : முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
தமிழர் திருநாள் பொங்கல்! - ரூ.3,000 பரிசுத் தொகை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
20 இலட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டம்! : நாளை (ஜன.5) தொடக்கம்!