Tamilnadu
“மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி; வீடியோ வெளியிட்டுவிட்டு தலைமறைவான கணவன்” : நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இந்த தம்பதிக்குப் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இதையடுத்து கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனைப் பிரிந்து திவ்யா தனது அம்மா வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், திவ்யாவின் அம்மா வீட்டிற்கு வந்த சத்தியமூர்த்தி கோவிலுக்குச் செல்லாம் என கூறி அவரை அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது பாலில் தூக்க மாத்திரை கலந்து அவருக்கு தெரியாமல் கொடுத்துள்ளார். இதைக் குடித்த திவ்யா உடனே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், சத்தியமூர்த்தி மனைவியை திருப்பத்தூர் எலவம்பட்டி பகுதிக்குத் தூக்கிச் சென்று அங்கு பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். அப்போது இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் உடனே திவ்யாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இந்த கொடூர சம்பவம் குறித்து சத்தியமூர்த்தி வீடியோ வெளியிட்டுத் தலைமறைவாகியுள்ளார். அந்த வீடியோவில், தனக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழுந்துவிட்டது. இதனால் எனது மனைவியைக் கொன்று, நானும் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன். எனவே என்னைத் தேடாதீர்கள் என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாகியுள்ள கணவன் மனைவியைக் கணவன் சத்தியமூர்த்தியை போலிஸார் தேடி வருகின்றனர். பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.145 கோடியில் தொழிற்பேட்டைகள், தொழிலாளர்கள் தங்கும் விடுதி... திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
ஒரே மாதத்தில் 46,122 தெருநாய்களுக்கு தடுப்பூசி.. சென்னை மாநகராட்சி தகவல்! - முழு விவரம் உள்ளே!
-
“இளையராஜா மீது முதலமைச்சர் பாசம் வைத்ததற்கு இதுதான் காரணம்...” - முரசொலி தலையங்கம் நெகிழ்ச்சி!
-
நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
-
“நிலவில் முதலில் கால் வைத்தது பாட்டிதான் என்றுகூட சொல்வார்கள்!” : பாஜக-வினரை விமர்சித்த கனிமொழி எம்.பி!