Tamilnadu
“சண்டையின்போது ஆத்திரம்... கொதிக்கும் வெந்நீரை ஊற்றி கணவனை கொலை செய்த மனைவி” : தஞ்சையில் கொடூரம்!
தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன். 62 வயதாகும் சின்னையன் விவசாயக் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வீரம்மாளுக்கும் சின்னையனுக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 10ஆம் தேதி இரவு வீரம்மாளுக்கும் சின்னையனுக்கு இடையே பிரச்சனை அதிகரித்துள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால், கணவன் மீது இருந்த ஆத்திரத்தில் வீட்டின் அடுப்பில் இருந்த வெந்நீரை எடுத்து ஊற்றிள்ளார் வீரம்மாள்.
கொதித்துக்கொண்டிருந்த வெந்நீரை ஊற்றியதால் சின்னையன் வலியால் துடித்துள்ளார். இதனையடுத்து அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து சின்னையனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சின்னையன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து வல்லம் போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து வீரம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!