Tamilnadu

”அவர் சேகர்பாபு அல்ல; செயல்பாபு” - அறநிலையத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் வெறும் அறிவிப்போடு நின்று விடாமல் நேரடியாக கண்காணிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்களில் ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பணிபுரியும் 12,959 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் ஆலய மண்டபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா, திருவாடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரை சேகர்பாபு என அழைப்பதை விட செயல்பாபு என அழைப்பதற்கு ஏற்ப செயல்படுகிறார். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்பை சட்டமன்றம் கூட முடியாத நிலையில் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை 24 மணி நேரமும் செயல்படுகிறது.

சட்டமன்றத்தில் இதுவரை யாரும் செய்யாத வகையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 120 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். ஏராளமான கோயில் திருப்பணிகள், புதிய தேர்கள், திருக்கோயில்களில் கல்லூரிகளில் திறப்பது, அர்ச்சகர்கள் மற்றும் கோயில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவையனைத்து திட்டங்களும் செயல்பாட்டிற்கு வந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலத்தை நாம் பார்க்கவிருக்கிறோம். சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அறிவிப்போடு நின்று விடாமல் அனைத்து திட்டங்களையும் மாதந்தோறும் கண்காணிக்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Also Read: ”மலையாளிகளின் சித்திரத்தை மாற்றிய வரலாற்று நாயகர் மு.க.ஸ்டாலின்” - புகழ்ந்து தள்ளிய கேரள தொலைக்காட்சி!