Tamilnadu
சட்டப்பேரவையில் அதகளம் செய்த முதலமைச்சர்... தமிழ் பண்பாட்டு ஆய்வு அறிவிப்புக்கு குவியும் பாராட்டு!
என்னவோர் அற்புதமான காலைப்பொழுது! சட்டசபையில் இன்று அதகளம் செய்திருக்கிறார் முதல்வர்.
"தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி இனி உலகெங்கும் பயணம் செய்வோம்" என அறைகூவல் விடுத்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
- தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வுப்பணிகளை மேற்கொள்ளும்.
- கடல் கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித் தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளும்.
- சேரநாட்டின் தொன்மை, பண்பாட்டினை அறிந்து கொள்ள கேரள தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுப்பணி
- எகிப்து, ஓமன் நாடுகளில் அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
- இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் உரிய அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- ஆந்திர மாநிலத்தின் வேங்கி, கர்நாடக மாநிலத்தின் தலைக்காடு பகுதியிலும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- ஒடிசா மாநிலத்தின் பாலூர் உள்ளிட்ட வரலாற்று இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் என்றும் நினைவுகூரப்படுவார்.
இடையில் வந்த ஆரியக் கூட்டம், திராவிடரை அழிக்கும் சதியை அரசியலாக்கியிருக்கும் நேரத்தில் உணர்ச்சிவசப்படாமல் அறிவியலின் வழி நின்று தமிழரின் வாழ்வை மீட்டெடுப்பதை அரசியலாக்கி இருக்கிறார் முதல்வர்.
திரையோடி சான்றகழ்ந்து தமிழரான திரைமீளர் நாமென உரக்கச் சொல்வோம்!
சிந்து தொடங்கி கீழடி வரை நீளும் பெருநாகரிகம் உயிர்ப்பு கொள்ளட்டும்
ஆரியம் வீழட்டும்.
மதச்சாதி பீடைகள் ஆரியத்தோடு சேர்ந்தொழியட்டும்.
முதல்வர் சொன்னது போலவே, "இந்திய துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப் பரப்பிலிருந்துதான் தொடங்கி" எழுதப்படட்டும்.
மதச்சார்பற்ற சாதியொழிந்த தமிழ் தேச அரசியலை இந்திய துணைக்கண்டம் கண்டடையட்டும்!
Also Read
-
100-வது நாளை நெருங்கும் பிக்பாஸ் வீடு; கராசார பொங்கல் விருந்துக்கு தயாராகும் போட்டியாளர்கள்!
-
90 அணைகளை கண்காணிக்க : ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
பொங்கல் திருநாள்; 34,087 சிறப்பு பேருந்துகள் இயக்கம் : உங்க ஊர் பேருந்து எங்கே நிற்கும் தெரியுமா?
-
திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான தீர்ப்பு : அமைச்சர் ரகுபதி பேட்டி!
-
”உங்க கனவை சொல்லுங்கள்” தமிழ்நாடு அரசின் புதிய திட்டம் : அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன முக்கிய தகவல்!