Tamilnadu
சசிகலாவின் பையனூர் பங்களா உள்ளிட்ட ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்.. பினாமி தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை!
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார்.
சசிகலா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையிலும் அவர் சிறையில் இருந்த காலத்தில் பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது தொடர்பான வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சென்னையை அடுத்த பையனூரில் 22 ஏக்கரில் அமைந்துள்ள சசிகலாவுக்கு சொந்தமான பங்களா சொத்து முடக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில் பினாமி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சசிகலா தொடர்புடைய பங்களாவை முடக்கி வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பினாமி சட்டத்தின் கீழ் சசிகலா தொடர்புடைய 1,600 கோடி சொத்துக்கள் 2019ஆம் ஆண்டு ஏற்கனவே முடக்கப்பட்டன. கொடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் 2020ஆம் ஆண்டு முடக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
வாக்களித்த மக்களுக்கு கைக்கொடுக்க இவ்வளவு தயக்கம் ஏன்? - முதலமைச்சரின் சர்ச்சை செயலுக்கு எழும் கண்டனம்!
-
அதிரடியாக ஜாகீர் கானை இறக்கிய சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் மைண்ட்.. இதுதான் ரகசியம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
-
உயிரைக் காக்கும் மருந்தா? விளம்பரத்திற்கு பயன்படும் மோதிரமா? : த.வெ.க.வை நோக்கி எழும் கேள்விகள்!
-
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 : தங்கத்தை தட்டித் தூக்கிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!
-
“எங்கப்பா காமராஜர் படம்?” : வெளிச்சத்திற்கு வந்த த.வெ.க அரசின் பித்தலாட்டம்!