Tamilnadu
"ஆமாங்க.. அதிமுக ஆட்சியில் துணி தரமில்லாமத்தான் இருந்துச்சு" : EPS-க்கு சவால் விட்ட அமைச்சர் துரைமுருகன்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பேரவையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "கைத்தறித்துறை அமைச்சர் காந்தி நேற்று பேசும்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் உள்ள துணிகள் தரமற்றுள்ளதாக குறிப்பிட்டார். இது கூட்டுறவு நெசவாளர்களை அவமதிக்கும்படி உள்ளது" என்றார்.
அப்போது அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, "கோ-ஆப்டெக்ஸில் கடந்த ஆட்சியில் தரமற்ற வகையில் துணிகள் வாங்கப்பட்டுள்ளது. இதனால் துணிகள் விற்பனையாகவில்லை. இதையடுத்து ரூபாய் 4 கோடி செலவு செய்து விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
யாரிடமிருந்து துணி வாங்கினோம் என்பது பிரச்சனையில்லை. தரமற்ற துணிக்காக 4 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதைத்தான் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆட்சியை விட தற்போது கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என நான் சவால் விடுகிறேன்" எனத் தெரிவித்தார்.
இந்த விவாதத்தின்போது பேசிய கைத்தறித்துறை அமைச்சர் காந்தி, “அ.தி.மு.க ஆட்சியில், தனியார்கள் கூட்டுறவு சங்கங்களில் தங்களுடைய துணிகளை கொடுத்து, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் விற்பனை செய்ததற்கான ஆதாரம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
Also Read
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!
-
ஆபத்தான FCRA சட்டம் : ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு கோரிக்கை வைத்த கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!