Tamilnadu
”ஒரு ரூபாய் கொடுத்தால் 30 பைசாதான் தராங்க; இது ஒன்றும் கருணை நிதியல்ல” வானதிக்கு அமைச்சர் PTR பதிலடி!
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சி துறை குறித்த மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்றது.
அப்போது, பா.ஜ.கவின் உறுப்பினரான வானதி சீனிவாசன் பேசுகையில் பிரதமர் மோடி வரும் போதெல்லாம் Go back modi என கூறி வந்தாலும் தமிழ்நாட்டிற்கு 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் பாதுகாப்புத் துறைக்கான திட்டம் கிடைத்துள்ளது என கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், நம்முடைய பணம்தான் நமக்கு திருப்பி வருகிறதே தவிர ஒன்றிய அரசு ஏதோ கருணையின் அடிப்படையில் எந்த நிதியை ஒதுக்கிடவில்லை.
Also Read: வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட வானதி சீனிவாசன்... கேள்விகளால் ரவுண்டு கட்டிய நிதியமைச்சர் பி.டி.ஆர்!
வளர்ச்சி மிகுந்த மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் போன்றவை ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபாய் ஈட்டிக் கொடுத்தால் அதிலிருந்து சிறிய அளவிலான நிதியே திரும்பி வருகிறது. அது வரியாக இருந்தாலும் சரி. மானியமாக இருந்தாலும் சரி.
ஆகவே வேறு எங்கேயோ ஈட்டப்பட்ட பணத்தை ஒன்றும் கொடுத்துவிடவில்லை. இது நிதிக்குழு கொடுத்த குறிப்புகளை கொண்டு வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என பா.ஜ.க உறுப்பினருக்கு மேற்கோள் காட்டி பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டு பங்கு 9.16 சதவிகிதமாக இருக்கிறது. ஒன்றிய அரசு கொடுக்கும் பங்கு என்னவோ வெறும் 4.07 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது.
ஆனால் உத்தர பிரதேசத்தின் உற்பத்தியில் 9.048 சதவிகிதம்தான். நிதிப்பங்கு என்னவோ 17 சதவிகிதமாக இருக்கிறது. ஆகவே மாநிலங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மக்களுடைய பணம் மாநிலங்களுக்கே திருப்பி கொடுக்கப்படுகிறது.
அதுவும் ஒரு ரூபாய் கொடுத்தால் வெறும் 35-40 பைசாதான் திருப்பியே கொடுக்கிறார்கள். ஆக, இது கருணையின் அடிப்படையில் கொடுக்கப்படுவது இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !