தமிழ்நாடு

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட வானதி சீனிவாசன்... கேள்விகளால் ரவுண்டு கட்டிய நிதியமைச்சர் பி.டி.ஆர்!

வானதி சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினரா அல்லது அரசியல் கட்சி பாதுகாவலரா என பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பினார்.

வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்ட வானதி சீனிவாசன்... கேள்விகளால் ரவுண்டு கட்டிய நிதியமைச்சர் பி.டி.ஆர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு தொடர்ச்சியாகப் பல திட்டங்களில் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் தி.மு.க அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து Union Government என்பதைச் சரியாக ஒன்றிய அரசு என அழைப்பது வழக்கமாகியுள்ளது. இருப்பினும் பா.ஜ.க இதற்கு தொடர்ந்து எதர்ப்புத் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பா.ஜ.க உறுப்பினர் வானதி சீனிவாசன் பேசுகையில், "இதுவரை மத்திய அரசு என அழைத்துவிட்டு திடீரென ஒன்றிய அரசு என அழைப்பதை நாம் பார்க்கிறோம்.

ரோஜாவுக்கு எந்த பெயர் வைத்தாலும் அதன் வாசத்தை மாற்ற முடியாது. அதுபோல மத்திய அரசை எந்த பெயர் வைத்து அழைத்தாலும் அதன் அதிகாரத்தைக் குறைக்க முடியாது. சமூக நீதிக்குப் பிரதமர் மோடியே உதாரணம்." எனப் பேசினார்.

இதற்குப் பதிலளித்து நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்,"ரோஜா ரோஜாதான். ரோஜாவை யாராவது மல்லிகை என்பார்களா? குஜராத் முதல்வராக இருந்தபோது மோடி எழுப்பிய கேள்விகள் எங்களுக்கு முன்னுதாரணமாகவே உள்ளன. வானதி சீனிவாசன்,கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினராகச் சட்டப்பேரவைக்கு வந்துள்ளாரா அல்லது ஒரு அரசியல் கட்சியின் பாதுகாவலாக வந்துள்ளாரா" என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.

banner

Related Stories

Related Stories