Tamilnadu
'சந்தேக புத்தி' : மனைவி மீதே ஆசிட் வீசி கொன்ற கணவன் - சேலத்தில் கொடூர சம்பவம்!
சேலம் மாவட்டம், குகை பகுதியைச் சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்குக் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், மனைவி ரேவதி மீது ஏசுதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து நேற்று மாலை ரேவதியும், அவரது தாயும் சேலம் மகளிர் காவல்நிலையத்தில் ஏசுதாஸ் மீது புகார் கொடுத்துவிட்டு பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்குப் பின்னால் வந்த ஏசுதாஸ் திடீரென தான் கொண்டுவந்த ஆசிட்டை மனைவி ரேவதியின் முகத்தில் வீசியுள்ளார். பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். ஆசிட் வீசியதில் எரிச்சல் தாங்காமல் கதறிய ரேவதியை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் தலைமறைவாக இருந்த ஏசுதாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறில் மனைவி மீது கணவனே ஆசிட் வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!