Tamilnadu
கிராமத்திற்கு வந்த முதல் பேருந்து.. 70 ஆண்டு காலக் காத்திருப்பை முடிவுக்குக் கொண்டுவந்த தி.மு.க அரசு!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து மூன்று வழித்தடங்களுக்கு புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் நைனாங்குளம் வழித்தடமும் ஒன்று. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்தே இன்று வரை இந்த கிராமத்திற்குப் பேருந்து வசதி இல்லாமலே இருந்தது.
இந்த கிராம மக்களும் பல ஆண்டுகளாகப் பேருந்து இயக்க வேண்டும் என தொடர்ச்சியாகக் கோரிக்கை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், 75 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு பேருந்து நைனாங்குளம் கிராமத்திற்குள் வந்ததை கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கைதட்டி வரவேற்றனர். பேருந்தில் ஏறி மகிழ்ச்சியாக பயணம் செய்தனர்.
தங்களின் 75 ஆண்டுக்கால கோரிக்கையை நிறைவேற்றி தங்களின் ஏக்கத்தையும், கனவையும் நினைவாக்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
Also Read
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!