Tamilnadu
“நாடாளுமன்றத்தை முடக்கிய குற்றவாளியே மோடிதான்.. இந்த அரசு நீடிக்கக்கூடாது” : கொந்தளிக்கும் திருப்பூர் MP!
பெகாசஸ் செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே வலியுறுத்தி வருகின்றன. ஆனால், ஒன்றிய அரசு பெகாசஸ் குறித்து விவாதிக்க முன்வராமல் நாள்தோறும் கூட்டத் தொடரை ஒத்திவைத்து வருகிறது.
அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் அமளியால் கூட்டத்தொடர் நேரமும், மக்கள் வரிப் பணமும் வீணாகிறது என ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத்தை முடக்கிய முதல் குற்றவாளி பிரதமர் மோடிதான் என்று திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.சுப்பராயன், “நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற முறையில் மக்களின் கருத்துக்களை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்கிறார்கள். ஆனால், மோடி அரசு மடியில் கணம் இருப்பதால் பயப்படுகிறது. ஒன்றிய அமைச்சரவை மக்கள் நம்பிக்கைக்கு விரோதமாக நடப்பதால் ஒரு நிமிடம் கூட நீடிக்கக்கூடாது. உடனே ராஜினாமா செய்து தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“நமது மிஷன் 2026 என்ன? ‘திராவிட மாடல் 2.O!’” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
சங்கிக் கூட்டத்தால் தமிழ்நாட்டை தொட்டுக்கூட பார்க்க முடியாது : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி!
-
“பா.ஜ.க.வினரின் DNA-வில் வாக்குத் திருட்டு நிறைந்துள்ளது!” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
தமிழ் மண்ணில் மத கலவரத்தை திட்டமிட்டால் ஓட ஓட விரட்டியடிப்போம் : RSS தலைவர் பேச்சுக்கு கி.வீரமணி கண்டனம்
-
“மீண்டும் திராவிடமாடல் ஆட்சி அமைந்து, தமிழ்நாட்டின் வளர்ச்சி தொடர வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!