Tamilnadu
காவல் ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்... நடிகர் உட்பட 4 பேர் கைது : கடலூர் அருகே போலிஸ் அதிரடி!
கடலூர் மாவட்டம், ஏ.ஏரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமு. இவர் ‘திட்டமிட்டபடி’ என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்துள்ளார்.
நடிகர் ராமு மீது ஏற்கனவே புதுப்பேட்டை காவல்நிலையத்தில் மணல் கடத்தல், தகராறு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறையில் இருந்து சில மாதங்களுக்கு முன்புதான் ராமு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், ராமு மீது உள்ள வழக்கு தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக காவல்துறை ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த ராமு மற்றும் அவரது நண்பர்கள் உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியை அசிங்கமாக பேசி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ராமு மற்றும் அவரது நண்பர்கள் திருநாவுக்கரசு, கரும்பூர் ஸ்ரீதர், பாக்கியராஜ் ஆகியோரை போலிஸார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“தி.மு.க-காரன் சிங்கில் டீயை குடித்துவிட்டு பம்பரமாக வேலை செய்வான்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர்!
-
தமிழ்நாடு முழுவதும் குறள் வாரவிழா : சிறப்பு காணொலியை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோ கைது : “ஒரு போர்க் குற்றமாகும்...” - முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
ஒன்றிய பா.ஜ.க அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது சென்சார் போர்டு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
அரசு சேவைகள் இனி மக்களின் விரல் நுனியில் : “நம்ம அரசு” whatsapp Chatbot சேவை தொடக்கம்!