இந்தியா

ஆணுறுப்பை அறுத்து இளைஞர் கொலை... காதலியின் வீட்டின் முன்பே உடலை எரித்த உறவினர்கள் : பீகாரில் பயங்கரம்!

காதலித்ததால் ஆண் உறுப்பு அறுக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆணுறுப்பை அறுத்து இளைஞர் கொலை... காதலியின் வீட்டின் முன்பே உடலை எரித்த உறவினர்கள் : பீகாரில் பயங்கரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே உள்ள ரேபுரா ராம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிஷ் டாகுவர். இவரது மகன் சவுரப். இவர் ஒடிசாவில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் சகோதரியின் திருமணத்திற்காக சவுரப் கடந்த ஜூன் மாதம் தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். மேலும் சவுரப் கிராமத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சகோதரியின் திருமணம் முடிந்த பிறகு சில நாட்கள் தங்கி காதலியை சந்தித்து வந்துள்ளார். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இருப்பினும் இவர்கள் இருவரும் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் வீட்டார் சவுரபை கடத்தி கொடூரமாக சித்ரவதை செய்து அவரின் ஆண் உறுப்பை சிதைத்து கொலை செய்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த சவுரப்பின் உறவினர்கள், பிரதேச பரிசோதனைகள் முடிந்து கிராமத்திற்கு வந்த அவரின் உடலை அவரது காதலியின் வீட்டு முன்பே வைத்து எரித்துள்ளனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வன்முறை வெடித்தது. பிறகு போலிஸார் அங்கு வந்து தடியடி நடத்தி வன்முறையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

banner

Related Stories

Related Stories