இந்தியா

கொரோனா.. ஜிகா.. இப்போ பறவைக்காய்ச்சல்... தொடரும் வைரஸ் தாக்குதல்: மூச்சுவிட முடியாமல் திணறும் கேரளா!

கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவி வருவது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா.. ஜிகா.. இப்போ பறவைக்காய்ச்சல்... தொடரும் வைரஸ் தாக்குதல்: மூச்சுவிட முடியாமல் திணறும் கேரளா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்றே குறையாத நிலையில் அங்கு ஜிகா வைரஸ் பரவி வருகிறது. இந்த தொற்றால் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொசு மூலமே இந்த நோய் பரவுவதால், கொசுவை ஒழிக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலத்தில் முண்டும் பறவை காய்ச்சல் பரவி வருவது மக்களை அச்சுறுத்தியுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 300க்கும் மேற்பட்ட கோழிகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.

இதனை அறிந்த கால்நடை பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோழிப்பண்ணைக்குச் சென்று, அதன் ரத்த மாதிரிகளை எடுத்து சோதித்தபோது, பறவைக் காய்ச்சல் காரணமாகக் கோழிகள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

மேலும் மற்றொரு பரிசோதனை மையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பறவைக் காய்ச்சல் இல்லை என தெரியவந்துள்ளது. இரண்டு பரிசோதனை கூடத்திலிருந்து மாறுபட்ட கருத்துகள் வந்ததை அடுத்து புனேயில் உள்ள பரிசோதனை கூடத்திற்கு ரத்த மாதிரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாகச் சிறுவன் உயிரிழந்த நிலையில், கேரளாவில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது மக்களை பீதியடையச் செய்துள்ளது.

மேலும் கொரோனா, ஜிகா வைரஸ் என பதற்றத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு தற்போது பறவைக் காய்ச்சல் மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories