Tamilnadu
2 வயது குழந்தையின் கழுத்தை இறுக்கி கொலை.. போலிஸிடம் சிக்கிய சித்தி: விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
விழுப்புரம் மாவட்டம், சித்தேரிகரைப் பகுதியைச் சேர்ந்த ஷமிலுதீன். மனைவி நஸிரீன். இவர்கள் இருவருக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் நஸிரீனுக்கு குழந்தை பிறக்கும் போது அவர் உயிரிழந்துள்ளார். அப்போது பிறந்த குழந்தைதான் நசீபா.
இதையடுத்து ஷமிலுதீனுக்கு,அப்ஷனா என்ற பெண்ணுடன் இரண்டாவது திருமணம் 2019ம் ஆண்டு நடைபெற்றது. இந்நிலையில், இரண்டு வயதாகும் குழந்தை நசீபா நேற்று முன்தினம் வீட்டில் இறந்து கிடந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து நசீபா இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்நிலையில், குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் சிறுமி நசீபா கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
பின்னர், இந்த வழக்கில் போலிஸார் தீவிரம் காட்டினர். இதில் ஷமிலிதூனின் இரண்டாவது மனைவி அப்ஷனாவிடம் போலிஸார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, குழந்தை நசீபாவை கொலை செய்ததாக அப்ஷனா வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இந்த விசாரணையில், இரண்டாவது மனைவிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஷமிலிதீன், பெங்களூருக்கு அடிக்கடி காய்கறி லோடு ஏற்றிச் சென்றுவிடுவதால் அவர் வீட்டில் அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை. இதனால் குழந்தை நசீபா மீது வெறுப்பைக் காட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 16ம் தேதி ஷமிலிதீன் வீட்டில் இல்லாதபோது, நசீபா தண்ணீர் கேட்டு அடம் பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அடைந்த அப்ஷனா, குழந்தையின் வாயையும் மூக்கையும் பொத்தி கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். குழந்தை இறந்ததை உறுதி செய்த பின் சடலத்தை அங்கேயே போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
பிறகு வீட்டுக்குத் திரும்பியதும் நசீபா இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் போல் நடித்தாகவும், அக்கம்பக்கத்தினரிடம் குழந்தை சமையல் அறைக்குத் தண்ணீர் குடிக்கச் சென்றபோது வழுக்கி விழுந்து இறந்து தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் அப்ஷனா கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!
-
ரூ.10.57 கோடியில் திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி... திறந்து வைத்தார் முதலமைச்சர்!
-
“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்”.. ரூ.103.38 கோடியில் 52 வேளாண் கட்டடங்கள்.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர்!
-
கோவையை மேம்படுத்த சிறப்பு திட்டம் : சமூக வசதிகளை பூர்த்தி செய்ய முதலமைச்சர் வெளியிட்ட புதிய அறிவிப்பு!
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!