Tamilnadu
“தி.மு.க தலைவர் போராட்டத்தாலேயே போரூர் ஏரி மீட்கப்பட்டது”: ஓ.பி.எஸ்-க்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!
தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அ.தி.மு.க ஆட்சியில் போரூர் ஏரியை மூட முயற்சி நடந்தது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய போராட்டத்தால்தான் தற்போது போரூர் ஏரி இருக்கிறது. அப்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். போரூர் ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் 4,15,570 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதாக ஒன்றிய அமைச்சரை சந்தித்தபோது கூறினேன். மேலும் முதலமைச்சரின் கோரிக்கையான, கூடுதல் தொகுப்பாக 1 கோடி தடுப்பூசி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் அமைச்சரிடம் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக அனைத்து புகைப்பட தரவுகளையும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அளித்துள்ளோம். எனவே விரைவில் ஒன்றிய குழுவினர் தமிழ்நாடு வந்து, கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு மாணவர்கள் சேர்க்கை குறித்து அறிவிக்கப்படும்.
ஜனவரி மாதம் முதல் தற்போது வரை டெங்குவால் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவும் இதுகுறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!