Tamilnadu
குடிபோதையில் வழிப்பறி; பணம் தர மறுத்தவரை கத்தியால் கிழித்த இளைஞர்கள் - திருப்பூரில் அட்டகாசம்!
திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவ்வழியே சென்ற பொது மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு இருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இளைஞர்களை பிடிக்க முற்பட்டபோது 5 இளைஞர்களில் இரண்டு பேர் தப்பி ஓடவே மதுபோதையில் இருந்த 3 பேரை பிடித்து கயிறு மற்றும் அவர்கள் அணிந்து வந்த சட்டைகளால் அவர்களை கட்டி வைத்து அடித்துள்ளனர்.
மேலும் காவல்துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
குடிபோதையில் இருந்த இளைஞர்கள் அவ்வழியே செல்லும் பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதோடு பணம் தர மறுத்த முதியவர் ஒருவரின் வயிற்றை கத்தியால் கிழித்தும் கல்லால் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
ரத்த காயத்துடன் இருந்த அவரை பொதுமக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல்துறையினர் தப்பியோடிய 2 பேர் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!
-
”ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்காகவே வாழ்க்கையை அர்ப்பணித்தவர் சுதாகர் ரெட்டி” : முதலமைச்சர் இரங்கல்!
-
2035-ம் ஆண்டு விண்வெளி ஆய்வு மையம், 2040-ல் நிலவில் தரையிறங்கும் திட்டம் - இஸ்ரோ தலைவர் பேச்சு !
-
"ஹமாஸின் தலைநகரமான காசா அழிக்கப்படும்"- இஸ்ரேல் அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை !