Tamilnadu
“எச். ராஜா 4 கோடி பணத்தை கையாடல் செய்திருந்தால் நடவடிக்கை” : விசாரணை தொடங்கப்போவதாக எல்.முருகன் பதில்!
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க வெறும் 4 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்நிலையில் தேர்தல் செலவுக்கான கட்சியின் மேலிடத்தில் இருந்து அனுப்பப்பட்ட பணத்தை செலவு செய்யாமல் வேட்பாளர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
முன்னதாக, பா.ஜ.கவை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர், 20 தொகுதியில் செலவு செய்வதற்காக பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ரூ.13 கோடி கொடுக்கப்பட்டதாகவும், இதற்கான கணக்கை வேட்பாளர்கள் கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பியது பா.ஜ.கவிற்குள்ளே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எச்.ராஜா, தேர்தல் செலவுக்கான அனுப்பப்பட்ட பணத்தை சுருட்டி ரூபாய் 4 கோடி மதிப்பில் வீடு கட்டிவருவதாகவும், தோல்விக்கான காரணத்தை ஆராயாமல் வேண்டும் என்றே எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார் என கூறி காரைக்குடியைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பா.ஜ.க தலைமைக்குப் புகார் செய்துவிட்டு கட்சியிலிருந்து கூண்டாக வெளியேறியுள்ளனர்.
மேலும், தமிழ்நாட்டு பொறுப்பாளர் சி.டி.ரவி, தேர்தல் செலவுக்காக அனுப்பப்பட்ட பணத்தை செலவு செய்யாமல் பலர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கிறார்கள். அது யார் என்பது ஆதாரங்களுடன் இருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று பா.ஜ.க மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தேர்தலுக்காக அனுப்பப்பட்ட பணத்தை செலவு செய்யாமல், அந்த பணத்தில் ரூபாய் 4 கோடிக்கு எச்.ராஜா வீடுகட்டி வருவதாக புகார் எழுந்துள்ளது குறித்து செய்திளார்கள் கேள்வி கேட்டனர்,
இதற்கு பதிலளித்த எல்.முருகன், மூத்த தலைவர் எச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.இவரின் இந்த பதில் பா.ஜ.கவில் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விரையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Also Read
-
சுகாதார அலுவலர்களுக்காக ரூ.4.05 கோடியில் 45 புதிய வாகனங்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
-
உருவாகிறது புயல் : எப்போது?.. எங்கே?... தமிழ்நாட்டிற்கு கனமழைக்கு வாய்ப்பா?
-
“மலைத்தேனின் சுவையைப்போல நம்மிடையே வாழ்வார்!” - திமுக MLA பொன்னுசாமி மறைவுக்கு துணை முதலமைச்சர் அஞ்சலி!
-
மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வந்த ‘தொல்காப்பியப் பூங்கா!’ : ரூ.42.45 கோடி செலவில் புதுப்பிப்பு!
-
வடகிழக்கு பருவமழை... சென்னை மாநகராட்சி சார்பில் 2 நாட்களில் 4.04 லட்சம் பேருக்கு உணவு ! - விவரம் உள்ளே!