Tamilnadu
“வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை” : தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
வேலைவாய்ப்பு பதிவைப் புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு, மூன்று மாதங்களுக்குள் புதுப்பித்துக்கொள்ளத் தமிழக அரசு சிறப்புச் சலுகை வழங்கியுள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்ட அரசாணை வருமாறு:-
2017, 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை பல்வேறு காரணங்களினால் புதுப்பிக்கத் தவறிய பதிவு தாரர்கள் பணிவாய்ப்பினை பெறும் வகையில் மீண்டும் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு புதுப்பித்தல் சலுகை தமிழக அரசின் அரசாணைப்படி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை வாயிலாக மே 28ம் தேதி வழங்கப்பட்டுள்ளது.
இச்சலுகையைப் பெறவிரும்பும் பதிவுததார்கள் அரசாணை வெளியிட்ட நாள் முதல் மூன்று மாதங்களுக்குள், அதாவது 27.8.2021க்குள் இணையம் வாயிலாக தங்கள் பதிவினைப் புதுப்பித்துக் கொள்ளலாம். அவ்வாறு இணையம் வாயிலாக பதிவினை புதுப்பிக்க இயலாத பதிவு தாரர்கள் மேற்குறிப்பிட்ட தேதிக்குள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு பதிவஞ்சல் மூலம் விண்ணப்பம் அளித்தும் புதுப்பித்துக் கொள்ளலாம்.
இணையம் மூலமாகப் புதுப்பித்தல் மேற்கொள்ளும் பொழுது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதள முகவரியைப் பயன்படுத்தி 27.8.2021 வரை புதிவுதாரர்கள் தங்களது பதிவினை புதுப்பித்துக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டத்தை கண்டு ஒப்பாரி ஓலமிடும் பழனிசாமி : அமைச்சர் ரகுபதிக்கு பதிலடி!
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 2,62,864 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்!
-
“நீங்கள் மற்றவர்களுக்கு Inspire ஆக இருக்க வேண்டும்”: மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3,000! : நாளை (ஜன.8) தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“Very sorry உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!