Tamilnadu
“பகுத்தறிவுக் கொள்கைகளால் திரையுலகில் நடிகர் விவேக் பெற்ற இடத்தை ஈடுசெய்ய வெகுகாலமாகும்” - ஆ.ராசா அஞ்சலி!
நடிகர் விவேக்கின் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருடைய மறைவுக்கு திரையுலகினர், முக்கிய பிரமுகர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகி்ன்றனர்.
நடிகர் விவேக் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். தி.மு.க சார்பில் நடிகர் விவேக் உடலுக்கு ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
சென்னை, சாலிகிராமம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஆ.ராசா எம்.பி., “திரையுலகில் கலைவாணர் என்.எஸ்.கே, எம்.ஆர்.ராதாவுக்குப் பிறகு சிரிப்போடும் சிந்தனையோடும் பகுத்தறிவு கொள்கைகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞரான விவேக் அவர்களின் மறைவு, கலையுலகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்துக்கும் பேரிழப்பு என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தி.மு.க தலைவர் தலைநகரில் இல்லாத காரணத்தினால், தி.மு.க சார்பிலும், தலைவர் சார்பிலும், மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்த அறிவுறுத்தியிருந்தார். அதன்படி, எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
திரையுலகில் பகுத்தறிவுக் கொள்கைகளால் அவர் பெற்ற மிகப்பெரிய இடத்தை ஈடுசெய்வதற்கு திரையுலகம் வெகு காலம் போராட வேண்டியிருக்கும். அவரை இழந்து வாடும் திரையுலகத்துக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இந்த கும்பல்தான் திடீர் ‘ஆபாச எதிர்ப்பு போராளி’கள்...” - உதயநிதி கைதுக்கு திமுக இளைஞரணி கண்டனம்!
-
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது... நீதிமன்ற உத்தரவை மீறி அராஜகத்தில் ஈடுபடும் தவெக அரசு!
-
“நாளை விவசாயிகளுக்கு ஆதரவாக கேள்வி எழுப்புவேன்..” - கர்ஜித்த உதயநிதி.. போலீசை ஏவிய தவெக அரசு!
-
காவிரி விவகாரம் : “கர்நாடகாவை பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டாமா?..” : விஜயை Left Right வாங்கிய முரசொலி !
-
“கடந்த 5 ஆண்டுகளாக தண்ணீர் வந்தது... ஆனால் இந்த ஆண்டு?” - விஜயை வறுத்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்!