Tamilnadu
தேர்தல் பிரச்சாரத்தில் அத்துமீற முயன்ற பா.ஜ.க தொண்டர் : விரலை நீட்டி எச்சரித்த நடிகை கௌதமி !
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், பணத்தை இறைத்து தேர்தலில் வெல்ல முயற்சிக்கும், பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகனை எதிர்த்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் மண்ணின் மகள் கயல்விழி செல்வராஜ் போட்டியிடுகிறார்.
காயத்ரி ரகுராம், நமீதா உள்ளிட்ட நடிகைகளை களமிறக்கி வெற்றி அடைய முயற்சிக்கும் பா.ஜ.க, அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் எல்.முருகன், தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய நடிகை கௌதமியை களம் இறக்கினார்.
தாராபுரம் தொகுதி அலங்கியத்தில் நடிகை கவுதமி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, கூட்டத்தில் நின்றிருந்த பா.ஜ.க தொண்டர் குடிபோதையில் தள்ளாடிய படியே கௌதமியின் பிரச்சார வாகனத்திற்கு அருகே சென்றார். பின்னர் கவுதமியின் கைகளை பிடிக்க முயற்சித்தபோது, அதிர்ச்சியடைந்த கௌதமி போதை தொண்டரிடம் இருந்து விலகினார்.
இருப்பினும் வாகனத்தில் ஏறி கையை பிடிக்க முயன்ற அந்த போதை தொண்டரை விரலை நீட்டி கௌதமி எச்சரித்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அருகே இருந்த பா.ஜ.க தொண்டர்கள் போதை தொண்டரை அப்புறப்படுத்தினர்.
பா.ஜ.க வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த நடிகை கவுதமியிடம் குடிபோதையில் பா.ஜ.க தொண்டர் அத்துமீற முயன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் பா.ஜ.க ஏற்பாடு செய்து வைத்திருந்த, பிரச்சார வாகனத்தை தனி ஒருவராக ஓட்டிச்சென்றார்.
இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்களில் ஒருவர், “சாதாரண மக்கள் வண்டி ஓட்டினா, வாடகை வண்டிக்கு தனி லைசென்ஸ், சொந்த வண்டிக்கு தனி லைசென்ஸ், இப்படி 1008 சட்டத்தை சொல்லி நம்ம கிட்ட பணம் வாங்குராங்க போலீஸ்காரங்க, ஆனா ஒரு நடிகை வண்டி ஓட்டிட்டு போற, அவ கிட்ட லைசென்ஸ் இருக்குதா? இல்லையானு? கூட யாரும் கேட்க மாட்டேங்கிறாங்க” என்று ஆதங்கப்பட்டு கொண்டார்.
Also Read
-
அதிகாலையிலேயே 7 மீனவர்கள் கைது.. உடனடியாக விடுவிக்கக் கோரி ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
750+ திரைப்படங்கள்... பத்ம ஸ்ரீ விருது.. ஒருமுறை MLA... - பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்!
-
திருவண்ணாமலை மக்கள் வசதிக்காக.. விடியல் பேருந்து & AC பேருந்துகளை தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர்!
-
திருவள்ளூரில் ரயில் தீ பிடித்து விபத்து... 3 தண்டவாளங்கள் சேதம்... 8 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து !
-
“தி.மு.கழகத் தொண்டர்களின் உழைப்பை ஒருபோதும் மறந்ததில்லை!” : கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!