Tamilnadu
தொழில் தொடங்க லஞ்சம் கேட்டு தொல்லை கொடுத்த அதிகாரிகள்: முதல்வருக்குக் கடிதம் எழுதி வாலிபர் தற்கொலை!
சென்னை அருகே உள்ள எண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம். இவர் அந்தப் பகுதியில் புதிதாகக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றைத் துவங்கினார். இந்தநிலையம் துவங்குவதற்காக விக்ரம் வங்கியிடம் கடனாகப் பெற்ற பணம், உறவினர்களின் நகைகளை அடகுவைத்து அதில் கிடைத்த பணம், நண்பர்கள் கொடுத்த பணம் என சுமார் 60 லட்சத்திற்கு முதலீடு செய்துள்ளார்.
இதையடுத்து, விக்ரம் சுத்திகரிப்பு நிலையம் செயல்படுவதற்கான அனுமதியைப் பெற அதிகாரிகளை அணுகியுள்ளார். அப்போது, பல மட்டங்களில் இருக்கும் அதிகாரிகள் லஞ்சம் கேட்டுள்ளனர். விக்ரமும், சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுமதி பெற வேண்டிய கட்டாயம் இருந்ததால் அவரும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளார்.
ஆனால், அதிகாரிகள் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அனுமதியை வழங்காமல் தொடர்ந்து, விக்ரமிடம் லஞ்சம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். உரிய ஆவணங்கள் இருந்தும், சுத்திகரிப்பு நிலையத்திற்கான அனுமதியைப் பெற முடியவில்லையே என மனு உலைச்சல் அடைந்த விக்ரம் தற்கொலை செய்து கொண்டார்.
விக்ரம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக, முதல்வர், டி.ஜி.பி ஆகியோருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். இந்த கடிதத்தில், ஊர் தலைவர் முதல் சுகாதார ஆய்வாளர் வரை அதிகாரிகளுக்கு லஞ்சப் பணம் எவ்வளவு கொடுத்துள்ளேன் என தெளிவாக எழுதி வைத்துள்ளார்.
மேலும், “தன்னிடம் லஞ்சமாகப் பெற்ற பணத்தைத் திரும்பப் பெற்று தனது அண்ணனிடம் கொடுக்க வேண்டும். லஞ்சம் இல்லாமல் இருந்திருந்தால் நான் இப்போது உயிரோடு இருந்திருப்பேன். இதற்கு ஏதாவது பன்னுங்க சார்” என உருக்கமாகக் கடிதம் எழுதியுள்ளார்.
சுயமாகத் தொழில் தொடங்கிய இளைஞரின் வாழ்க்கை அதிகாரிகளின் லஞ்ச வெறியால் முடித்துவிட்டது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!