தமிழ்நாடு

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு : தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசு!

50 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு : தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி புதிதாக கொரோனா பாதிப்போரின் எண்ணிக்கை 800-க்கும் கீழ் குறையத் தொடங்கியது. தொடர்ந்து குறைந்து வந்த தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. அதன்படி சென்னை, கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் 66 நாட்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் 800-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நாட்களுக்கு பின்னர் கொரோனா சிகிச்சை பெறுகிறவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 64 ஆயிரத்து 645 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 476 ஆண்கள், 360 பெண்கள் என மொத்தம் 836 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 317 பேரும், செங்கல்பட்டில் 81 பேரும், கோவையில் 70 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தென்காசி, ராமநாதபுரத்தில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா பாதிப்பு : தடுப்பு நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் அதிமுக அரசு!

இந்த பட்டியலில் 12 வயதுக்குட்பட்ட 38 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 165 முதியவர்களுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உடன் ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் பொது மக்கள், தனி மனித இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் துக்க நிகழ்வுகளில் குறிப்பிட்ட நபர்களை மட்டும் அனுமதிப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்க பட வாய்ப்புள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு ஆலோசனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது. இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

banner

Related Stories

Related Stories